"வெளியே போகும் போது முகம் கழுவி தலை வாரி போடா எண் அருமை மகனே" என்ற என் அம்மாவை பார்த்து சொன்னேன், "நா என்ன பொம்பள புள்ளையா மா, அம்பள சிங்கமாக்கும்", என்று வெளியே சென்று விட்டேன்.
பேருந்தில் போகும் போது, முன் இருக்கையில் தான் தாயொடு அமர்ந்து இருந்த குழந்தை, என்னை பார்த்து சிநேகமாக சிரித்தது, "என்ன அழகு, குழந்தை என்றாலே அழகுதான், கவலை இல்லாத வாழ்க்கை" என்று நினைத்தவாறு அதனுடன் சிரிப்பு காட்டி விளையாடி நேரம் களித்தேன், அவர்கள் இறங்கும் இடம் வந்தது, எழுந்து சென்றார்கள், கீழே இறங்கியதும், அக் குழந்தை அழுக செய்தது.
அக் குழந்தையின் அழுகையை நிறுத்த அத் தாய் சொன்னாள்,
"நீ இப்ப அழுகையை நிறுத்து, இல்ல, பஸ்ல பின்னால இருந்த திருட மாமாகிட்ட புடிச்சு குடுத்திருவேன்"
Wednesday, February 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment